Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 17 ஏப்ரல் (ஹி.ச.)
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்திலேயே அதிர்ச்சி அடைந்தது. ரிக்கல்டன் 2 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகவும் வெளியேறினர்.
பின்னர் டி காக் மற்றும் நமன் திர் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
நமன் திர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் டி காக் சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா 15 ரன்களில் அவுட்டானார்.
அதன் பின்னர் பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து அதிரடியாக விளையாடினர்.
குறிப்பாக பிரப்சிம்ரன் சிங் சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார்.
இருவரின் இணைப்பு மும்பை அணியின் பந்துவீச்சை சமாளித்து வேகமாக ரன்கள் சேர்த்தது.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார்.
மும்பை அணியின் பந்துவீச்சில் கசான்ஃபர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA