ஜல் ஜீவன் இயக்கம் ஒவ்வொரு வீட்டையும் விரைவாகச் சென்றடையும் - வானதி சீனிவாசன்
கோவை, 17 ஏப்ரல் (ஹி.ச.) ஜல் ஜீவன் இயக்கம் என்பது இந்தியாவின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், தனிப்பட்ட குழாய் இணைப்புகள் (FHTC) மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் முக்கியத் திட்டமாகும். ஆக
Vanathi Srinivasan


கோவை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

ஜல் ஜீவன் இயக்கம் என்பது இந்தியாவின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், தனிப்பட்ட குழாய் இணைப்புகள் (FHTC) மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் முக்கியத் திட்டமாகும்.

ஆகஸ்ட் 2019 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தலா ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் குடிநீரை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து,தேசிய பாஜக மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், தமிழகம் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் சென்றடைவதை உறுதி செய்து வருகிறது.

ஜல் ஜீவன் இயக்கம் தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் முழுவதும் குழாய் நீர் இணைப்புகளை வழங்கி வருகிறது.

இதன் மூலம் குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறந்த ஆரோக்கியம், சுத்தமான குடிநீர் வசதி கிடைக்கிறது.

இது பெண்களை அன்றாடப் போராட்டங்களிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு வேலை, கல்வி மற்றும் வளர்ச்சிக்கு நேரத்தை வழங்குகிறது.

இபிஎஸ் தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தின் கீழ், இந்த இயக்கம் மீதமுள்ள ஒவ்வொரு வீட்டையும் விரைவாகச் சென்றடையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b