கர்நாடகாவில் கார் மீது பேருந்து மோதி விபத்து - தீப்பிடித்து 6 பேர் உயிரிழப்பு
கர்நாடகா, 17 ஏப்ரல் (ஹி.ச.) கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாத்கிர் மாவட்டம் அருகே இன்று நடந்த இந்த விபத்தில், ஒரு கார் மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி மோதியதாக த
விபத்து


கர்நாடகா, 17 ஏப்ரல் (ஹி.ச.)

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாத்கிர் மாவட்டம் அருகே இன்று நடந்த இந்த விபத்தில், ஒரு கார் மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதலின் தாக்கத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால், அதில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P