திமுகவில் ஆணாதிக்கம் அதிகம் - குஷ்பு குற்றச்சாட்டு
மதுரை ,17 ஏப்ரல் (ஹி.ச) மதுரையில் தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் உயர்ந்து
M


மதுரை ,17 ஏப்ரல் (ஹி.ச)

மதுரையில் தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் உயர்ந்து வருகின்றன. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.

திமுகவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது.

தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் பெண்கள் முன்னேறிவிடுவார்கள் என்ற பயத்தில் திமுகவினர் அரசியல் நாடகம் ஆடுகின்றனர்.

மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படும் திட்டங்களை திசைதிருப்பும் நோக்கில் நகல் எரிப்பு போராட்டங்களை நடத்துகின்றனர்.

சுந்தர் சி கேள்வி எழுப்பிய பிறகே ஒரே நாளில் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டன.

பத்து ஆண்டுகளாக அந்த தொகுதியில் உள்ள அமைச்சர் செய்ய முடியாததை சுந்தர் சி பத்து நாட்களில் செய்து முடித்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் சுந்தர் சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போதைய எம்.எல்.ஏ. வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர்.

வரவிருக்கும் தேர்தலில் சுந்தர் சி கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA