Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 17 ஏப்ரல் (ஹி.ச.)
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர்
அர. சக்கரபாணி வாக்குகள் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
பெண்களுக்காக பெண்கள் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்களை முதல்வர் தீட்டி வருவது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது.
மகாகவி பாரதி பெண்கள் முன்னேற வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னுக்கு வர வேண்டுமென பாடுபட்டார்.
தற்போது மகாகவி பாரதி இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை பார்த்து உண்மையிலே பாராட்டி, பெருமிதம் கொண்டிருப்பார்.
திண்டுக்கல் தொகுதியில் 60254 இல்லத்தரசிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொகுதியில் 146 நியாய விலை கடைகள் புதிதாக கட்டப்பட்டு 123 நியாயவிலை கடைகள் முழுநேரம் மற்றும் பகுதிநேர கடைகளாக மாற்றப்பட்டுள்ளது.
மார்க்கம்பட்டி ஊராட்சியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் அதிநவீன விவசாயக் கூடிய புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
19 கோடி மதிப்பீட்டில் அருள்மிகு குழந்தை வேலப்பன் மலைக்கோவிலில் கிரிவலப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடியில் 100 புதிய சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளது, இரண்டாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற பின் கள்ளமந்தையம் தனி வட்டமாக உருவாக்கப்படும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P