தண்ணீர் விற்பனைக்கு தடை பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை - சீமான் வாக்குறுதி
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம்பரம் சட்டசபை தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: என்னிடம் ஆட்சியை கொடுத்து விட்டால் 5வது வருடத்தில், இங்கே இருந்து
தண்ணீர் விற்பனைக்கு தடை பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை - சீமான் வாக்குறுதி


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம்பரம் சட்டசபை தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது:

என்னிடம் ஆட்சியை கொடுத்து விட்டால் 5வது வருடத்தில், இங்கே இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள தாம்பரத்தில் நான் பேசுகிற மாதிரி, பின்லாந்தில் இருந்து ஒருவர் உலக தரத்திற்கு கல்வியில் தமிழகம் இருக்கிறது என்று சொல்வான்.

என்னுடைய கல்வி சிஸ்டம், கற்பிக்கும் வழிமுறைகள், கட்டட அமைப்பு எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன். உலகத்தரத்திற்கு கல்வியை கொடுத்து விடுவேன்.

ஒரு ரூபாய் காசு வாங்க மாட்டேன் அதன் பிறகு வேற என்ன வேண்டும். வேற உயிர்காக்கும் மருத்துவம் வேண்டும். மருத்துவத்திற்கு என்ன பண்ணுவேன். கருணாநிதிக்கு முடியவில்லை என்றால் காவேரி, நோ காவேரி, ஜெயலலிதாவுக்கு முடியவில்லை என்றால் அப்போலோ, நோ அப்போலோ ஒன்லி அரசு மருத்துவமனை இங்கே வா, உலகத்தரத்திற்கு மருத்துவ தரத்தை கொடுக்கிறோம். தனியார் மருத்துவமனை காவேரி, அப்போலோ, எம்.ஜி.ராமசந்திராவில் என்ன தரம் கிடைக்கிறது என்று நீ நினைக்கிறயோ, அதனை அரசு மருத்துவமனையில் கொடுப்பேன்.

இனிமேல் என் மக்களுக்கு நம்பிக்கை வரும். அரசு மருத்துவமனைக்கு போனால் தான் பொழைப்போம் என்ற நம்பிக்கையை கொடுப்பேன். உலக தரத்திற்கு மருத்துவத்தை உயர்த்தி, ஒரு ரூபாய் கட்டணம் இல்லாமல் கொடுப்பேன் மருத்துவம் மகத்தான சேவை, அது என் மக்களுக்கு தேவை கல்வி, மருத்துவம் இரண்டிற்கும் காசு கிடையாது. உன் சம்பளத்தில் பாதி காசு மிஞ்சம் செய்துவிட்டேன். தண்ணீர் விற்பனைக்கு தடை பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை செய்கிறேன். தண்ணீர் மனித தேவை அல்ல; உலக உயிர் தேவை.

நான் இயற்கையின் மகன், நான் பூமியை காதலிக்கிறேன். அதனால் தண்ணீரை விற்பனை செய்யவிட மாட்டேன் நானே தூய தண்ணீரை உங்கள் வீட்டு வாசலில் கொண்டு தந்து விடுகிறேன். ஒரு ரூபாய் காசு கிடையாது. இந்த 3 தான் தமிழ் தேசிய அரசில் கட்டணம் இல்லாமல் கிடைக்கும். மற்றப்படி பெண்களுக்கு ஓசி பஸ், ஆண்களுக்கு ஓசி பஸ், நோ ஓசி பஸ் ஒன்லி ஏசி பஸ். காசு கொடுத்து போ, தரமான சாலை தருவேன். உயிரை தவிர என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.

ஆனால் அடைவதற்கு மிகப்பெரிய கனவை வைத்துள்ளேன்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b