பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்-பிரதமருக்கு கனிமொழி பதிலடி
புதுடெல்லி , 17 ஏப்ரல் (ஹி.ச.) நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாக்களை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், ஆதரவாக 251 பேரும், எதிராக 185 பேரும்
D


புதுடெல்லி , 17 ஏப்ரல் (ஹி.ச.)

நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாக்களை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், ஆதரவாக 251 பேரும், எதிராக 185 பேரும் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 40 நிமிடங்கள் பேசியபோது, தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இதற்கு பதிலளித்த கனிமொழி, கருப்பு உடை அணிந்ததற்கான விமர்சனங்களுக்கு கடும் பதிலடி அளித்தார்.

“பெண் தெய்வமான காளி கூட கருப்பு நிற உடையில்தான் காட்சியளிக்கிறார். எனவே கருப்பு உடை அணிவதை குற்றமாக பார்க்க முடியாது” என்று அவர் கூறினார்.

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கருப்பு நிற சட்டை அணிந்து அவையில் பங்கேற்றனர்.

திருமாவளவன் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.

மேலும், பெண் எம்.பி.க்கள் கருப்பு நிற சேலை அணிந்து அவையில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA