Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 17 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், 2 நாள் அரசு முறை பயணமாக வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் இலங்கை செல்கிறார்.
இந்த பயணம்,
26 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை செல்லுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த கிரிஷன் காந்த், இலங்கையின் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்தார்.
முக்கிய சந்திப்புகள்
இந்த பயணத்தின் போது, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, பிரதமர் ஹரினி அமரசூரியா, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.
ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்த 2 நாள் பயணத்தின் போது, எரிசக்தி, சமூக மேம்பாடு, பிராந்திய வளர்ச்சி, மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா–இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
முன்னைய பரஸ்பர பயணங்கள்
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 நாள் பயணமாக இலங்கை சென்றார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா இந்தியா வந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 17 முதல் 20-ந்தேதி வரை இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இந்தியா வந்து, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA