திருத்தணியில் ரயில் பயணிகளிடம் தேமுதிக வேட்பாளர் டி. கிருஷ்ணமூர்த்தி முரசு  சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர், 17 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டி. கிருஷ்ணமூர்த்தி இன்று காலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திர
பிரசாரம்


திருவள்ளூர், 17 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டி. கிருஷ்ணமூர்த்தி இன்று காலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவருடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம். பூபதி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தின் போது திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறிய அவர், மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் வாக்குறுதியின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.8000 கூப்பன் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், திருத்தணி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடமும் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்.

இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு முரசு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam