Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஏப்ரல் (ஹி.ச.)
மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பாஜவின் ஹரிவன்ஷ் பதவிக்காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து அந்த பதவி காலியானது. மாநிலங்களவைத் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
தேர்தலுக்கான முன்மொழிவு அறிவிப்புகளை பெறுவதற்கான கடைசித் தேதி மற்றும் நேரம் நேற்று நண்பகல் 12 மணிக்கு முடிவடைந்தது.
துணைத் தலைவராக ஹரிவன்ஷை தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக ஐந்து முன்மொழிவு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் பெறப்படவில்லை. இதனால் ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஹரிவன்ஷ்க்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P