இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருந்த 35 பண்டல்கள் உயர்தர வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
ராமநாதபுரம், 17 ஏப்ரல் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் வழியாக தொடர்ந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று புதுமடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, புதுமட
Foreign Cigarette


ராமநாதபுரம், 17 ஏப்ரல் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் வழியாக தொடர்ந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று புதுமடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, புதுமடம் கடற்கரை நோக்கி சென்ற வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வேனில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல் பண்டலாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, சோதனை செய்ததில் 35 பண்டல்கள் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடைய இந்திய மதிப்பு 83 லட்சம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சிகரெட் பண்டல்கள் அனைத்தும் படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது வேன் ஓட்டுனரை பிடித்து கடத்தல் காரர்கள் யார்,

யாருக்கு எடுத்து செல்லப்படுகிறது என்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழுவினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN