Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 17 ஏப்ரல் (ஹி.ச.)
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை
போட்டியிடுகிறார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை
மனோகரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தலைமையில்
குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட,
வரதராஜபுரம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் திமுக ஆட்சியின் 5 ஆண்டு
கால சாதனைகள், திருப்பெரும்புதூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்,
பணிகள்,2026 திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து பொதுமக்கள்
மற்றும் பெண்களிடத்தில் எடுத்துக் கூறி கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டார்.
அப்போது வரதராஜபுரத்தில் பேசிய செல்வப் பெருந்தகை கூறியதாவது;
ஒரு ஓட்டு சிந்தாமல் சிதறாமல் ஒரு ஒரு ஓட்டு வெளியே போகுது என்றால் அது பிஜேபிக்கு போடும் ஓட்டு இந்த தலைமுறையை அழிக்க தயாராக இருக்கிறார்கள் அடுத்த
தலைமுறையும் வளராமல் தடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். அங்கு கூட்டணி
வைத்திருப்பவர் தான் எடப்பாடி. இங்கே இரட்டை இலையும் அதிமுகவும் நிற்கவில்லை
பிஜேபி தான் அவர்களின் முகமூடி போட்டுக் கொண்டு நிற்கிறது.
அவர்கள்
எத்தனை கட்சியை உடைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். ஒரு கட்சி அப்பாவிடம்
முரண்பட்டு கட்சி உடைத்தவர். ஒரு கட்சி சித்திக்கு முரண்பட்டு விரோதமாக இருந்து
வெளியே வந்த கட்சி. இன்னொரு கட்சி சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றி
கொண்டிருக்கிறார்.
இவர்களெல்லாம் முரண்பட்ட கூட்டணி. எடப்பாடி பழனிசாமி பற்றி
உங்களுக்கு தெரியும் அவர் எப்படி முதலமைச்சரானார் அவரின் முதலமைச்சர்
ஆக்கியவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறாரா.. அவர்களுக்கு விசுவாசமாக இல்லை பின்
எப்படி நாட்டு மக்களுக்கு விசுவாசமாக இருப்பார் என பேசி வாக்கு சேகரித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன்
இருசக்கர வாகனங்களில் பேரணியாக
திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்
செல்வபெருந்தகைக்கு வழி நெடுகிலும் பெண்கள் பொது மக்கள் ஆரத்தி எடுத்து மலர்
தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam