சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் வாக்கு சேகரிப்பு
கோவை, 17 ஏப்ரல் (ஹி.ச.) கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம்,ஒன்டிபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாகச் சென்
KR Jeyaram


கோவை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம்,ஒன்டிபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்த அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து பொதுமக்களுடன் நேரடியாக உரையாடிய ஜெயராம், அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.

மேலும், சிங்காநல்லூர் தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என உறுதியளித்தார். பொதுமக்களின் நலனே தன்னுடைய முக்கிய குறிக்கோள் என்றும், தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் நலத்திற்காக முழுமையாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டு, வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN