Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)
விடுதலைப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த தினமான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தன்னுடைய வீரத்தாலும், அசாத்திய திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை அதிரச் செய்தவருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்டு, தன் தனித்துவ உத்திகளால் வெற்றிமேல் வெற்றி கண்டு, பிறந்த மண்ணின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் வீரர் தீரன் சின்னமலை அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b