Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)
கல்யாண முருங்கை தமிழகமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள்.
மிளகுக் கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள்.
காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காக வளர்ப்பார்கள்.
இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது.
இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும்.
ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும்.
மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும்.
இதன் மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும்.
இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக ஒப்பிடுவார்கள்.
உருட்டு விதைகளையும், முட்களையும் கொண்ட மென்மையான கட்டைகளை உடைய மரம்.
விதைகள் கருப்பாக இருக்கும்.
இதை கல்யாண முருங்க மரம் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / Durai.J