ஹெலிகாப்டரில் உதகைக்கு வந்த குஷ்பு – பறக்கும் படையினர் திடீர் சோதனை
உதகை, 17 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக குஷ்பு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வர
குஷ்பு


உதகை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக குஷ்பு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, உதகை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள குஷ்பு ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வந்தார்.

அவர் வந்த ஹெலிகாப்டர் உதகையில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்கியதையடுத்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில், குஷ்பு பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனைக்கு உட்படுத்தினர். இந்த சோதனை நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தேர்தல் நேரங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P