ராகுலும் ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லை - ஆர்.எஸ்.பாரதி
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை தோனம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணிக்க
பாரதி


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை தோனம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாஜகவினர் வீடு தோறும் சென்று ரூ.10,000 வழங்கப்படுமெனக் கூறி வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், அதிமுக தரப்பிலும் ரூ.10,000 வழங்கப்படுமென கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் பாஜகவின் ‘B Team’ போல செயல்படுகிறது எனவும் கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என கே. அண்ணாமலை கூறியிருந்த நிலையில், தற்போது அவர் தமிழ்நாட்டிற்கு வருகிறார் எனவும், அண்ணாமலை தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார் எனவும் பாரதி விமர்சித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம் செய்யுமா என்ற கேள்விக்கு, இருவரும் தனித்தனியாகவே பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், முன்கூட்டியே திட்டமிட்ட பயண அட்டவணை காரணமாக ஒன்றாகச் செயல்பட நேரமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

திமுக அளித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாக எதிர்வினை அளிக்கப்படும் என்றும் ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P