Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 17 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் தமது தபால் வாக்கை பதிவு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று, அவரிடமிருந்து தபால் வாக்கை பெற்றுக்கொண்டனர்.
85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தபால் வாக்கு வசதியின் கீழ் அவர் தனது ஜனநாயக உரிமையை பயன்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என சத்தியம் செய்திருந்ததாகவும் ஆனால், குடும்ப நெருக்கடி காரணமாக அதை மீறி அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும் வேதனை தெரிவித்தார்.
இந்தியாவிலேயே சிறு வயதில் ஒருவரை அமைச்சராகியதும் நான் தான் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பல்கலைக்கழகம் போல் இருந்த தங்கள் குடும்பத்தை பிரித்தது சௌமியா தான் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P