சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி, 17 ஏப்ரல் (ஹி.ச.) இதனை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணும் வகையில் 1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைத்துக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி வைக்கத் தமிழக அரசு (அரசாணை எண்: G.O (D) No. 454, உள்துறை, நாள்: 18.0
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட மாவட்ட  ஆட்சியர் உத்தரவு


தூத்துக்குடி, 17 ஏப்ரல் (ஹி.ச.)

இதனை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணும் வகையில் 1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைத்துக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி வைக்கத் தமிழக அரசு (அரசாணை எண்: G.O (D) No. 454, உள்துறை, நாள்: 18.03.2026) ஆணையிட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகள் வாக்குப்பதிவை முன்னிட்டு 21.04.2026 முதல் 24.04.2026 வரை, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு: 02.05.2026 முதல் 04.05.2026 வரை ஆகிய நாட்களில் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும்:

இந்தத் தடையை மீறிச் செயல்படும் வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b