அதிமுக ஆட்சி அமைந்ததும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் - பி.ஆர்.ஜி.அருண்குமார் பரப்புரை
கோவை, 18 ஏப்ரல் (ஹி.ச.) கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று துடியலூர் அடுத்துள்ள அசோகபு
பி.ஆர்.ஜி.அருண்குமார்


கோவை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இன்று துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம்

ஊராட்சியில் செங்காளிபாளையம், காந்தி காலனி, கணபதி நகர், பாலாஜி நகர், நியு

பாலாஜி நகர், அசோகபுரம் 4 ரோடு, வி.கே.எல் நகர், ரங்காம்மாள் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, என்.ஜி.ஜி.ஒ காலனி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்தார்.

அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ரமேஷ், முன்னாள் துணைத்தலைவர்

ஆடிட்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆளுயுர மாலைகள் அணிவித்து வீரவெற்றிவால்

கொடுத்தனர். முன்னதாக அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டனர்.

தொடர்ந்து அவர் பேசும்போது,

அதிமுக பொதுசெயலாளர், நாளைய முதல்வர் எடப்பாடியார்

கூறிய வாக்குறுதிகள்படி அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். கிராம புற

பகுதிகளில் இடம் இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடுகட்டித்தரப்படும்.

நகர்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிதரப்படும். திமுக மாதிரி இல்லாமல்

அனைத்து பெண்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக மக்களை

ஏமாற்றி வீட்டுவரி, குடிநீர்வரி, சொத்துவரி, மின்சார கட்டணத்தை உயர்த்தியது

தான் திமுகவின் சாதனை.

அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சி

அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும். விடியல் தரப்படும் என்று

கூறி ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு மட்டும் விடியல் ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைகளை

குறைப்பாத கூறிய ஸ்டாலின் 11 டூ 11 பார்கள் சுமார் 1200 பார்களை திறந்து மக்கள் பணத்தை சுரண்டியுள்ளனர். கிராம புற மக்கள் பயன்படும் வகையில் 100 நாள்

வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று கூறி ஏமாற்றினார் ஸ்டாலின்.

ஆனால் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 150 நாட்களாக வேலை உயத்தப்பட்டு விரைவாக

ஊதியமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் மத்திய அரசின் திட்டங்கள்

அனைத்தும் நம்ம கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கொண்டு வருவேன் என்றும் நீங்கள்

அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,

எடப்பாடியார் முதல்வராக பொறுப்பு ஏற்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று

கூறினார்.

இந்த பரப்புரையில் கைலைவாசன், செல்வகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பி.ஜே.பி மண்டல தலைவர் சரவணகுமார், பொதுசெயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam