சாதனைகளை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சி, 18 ஏப்ரல் (ஹி.ச.) திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக உள்ள அன்பில் மகேஷ் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். BHEL தொழிற்சாலை முன்பு நடைபெற்ற இந்த சந்திப்பில், தொழிலாளர்களுடன் நே
அமைச்சர் அன்பில் மகேஷ்


திருச்சி, 18 ஏப்ரல் (ஹி.ச.)

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக உள்ள அன்பில் மகேஷ் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

BHEL தொழிற்சாலை முன்பு நடைபெற்ற இந்த சந்திப்பில், தொழிலாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அவர், அவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக மக்களின் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்த சாதனைகளை மனதில் வைத்து, மீண்டும் திமுக அரசை தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்களையும் தொழிலாளர்களையும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வு தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

மேலும சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam