Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உயிரிழந்தனர்.
கரிக்கந்தாங்கலை சேர்ந்த அருண்குமார் (23) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த நரேஷ் (25) ஆகியோர் லாரி ஓட்டி வந்த நிலையில், கூட்ரோடு அருகே முள்ளுவாடி பகுதியில் இரு லாரிகளும் நேருக்கு நேர் மோதின.
மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், லாரிகளின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இதில், இரு டிரைவர்களும் வாகனங்களுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி உடல்களை மீட்டனர்.
பின்னர், அவை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam