Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை நேரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அப்போது, பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பான ஆட்சி வழங்கியதாக பாராட்டினார்.
மக்களின் தேவைகளை அறிந்து, குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தை இந்தியாவின் பொருளாதாரத்தில் முன்னணி மாநிலமாக உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின் என கூறிய அவர், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000-இலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்றும், ரூ.8000 பரிசுக் கூப்பன் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் பெண்கள் அதிக அளவில் ஆதரவு அளித்து அவரை வரவேற்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam