தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி - அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தூத்துக்குடி, 18 ஏப்ரல் (ஹி.ச.) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசியல
DMK members celebrate


தூத்துக்குடி, 18 ஏப்ரல் (ஹி.ச.)

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, இத்தகைய முக்கிய மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம்.

அந்த வகையில், இம்மசோதா வெற்றி பெற 352 வாக்குகள் (வாக்களித்த 528 உறுப்பினர்களில் 2/3 பங்கு) தேவைப்பட்டது.

ஆனால், தேவையான ஆதரவு கிடைக்காததால் மூன்று மசோதாக்களும் தோற்கடிக்கப்பட்டன.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தூத்துக்குடியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளரும், மகளிர் நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு இன்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்வின் போது,

தமிழக உரிமையைக் காப்போம், மத்திய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடித்தோம், தேசிய ஜனநாயக கூட்டணியின் சதியை முறியடித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க என்பன உள்ளிட்ட பல்வேறு வெற்றி முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநிலப் பேச்சாளர் சரத்பாலா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b