Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 18 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.
அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் இல்லாத அரசு துறைகள் இல்லை எனக் கூறி திமுக ஆட்சியை கடுமையாக தாக்கினார்.
மேலும், தர்மபுரி மாவட்டம் திமுக ஆட்சி காலத்தில் வளர்ச்சியிலிருந்து பின்தங்கியதாகவும், மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தங்களை திமுக மற்றும் காங்கிரஸ் எதிர்த்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரையும் குறிப்பிட்ந்து, மக்களவை தொகுதிகள் உயர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து தர்மபுரி மாவட்ட வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam