Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச)
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது.
இந்தச் சூழலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர்பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனாலும் சில அரசியல் கட்சிகள், பல்வேறு நூதன வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை கவர முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் வாகனங்களில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள இன்று சென்னை வந்திருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்பகுதியில் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
ராகுல்காந்தி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
Hindusthan Samachar / vidya.b