சுடுகாட்டை அகற்ற கோரி மீனவர்கள் போராட்டம்
விழுப்புரம், 18 ஏப்ரல் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து, கடலோர பகுதியில் தங்களது மீன்பிடி படகுகளை நிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அருகில
மீனவர்கள்


விழுப்புரம், 18 ஏப்ரல் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து, கடலோர பகுதியில் தங்களது மீன்பிடி படகுகளை நிறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அருகில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் சடலங்களை அடக்கம் செய்து சுடுகாடாக பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாற்று இடம் இருந்தும் தொடர்ந்து இதே பகுதியை பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் குடிநீரில் சடல கழிவுகள் கலப்பதாகவும், கடலுக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவதால் கடல் அரிப்பின்போது சடலங்கள் கடலில் கலக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இதனால் மீன்கள் பாதிக்கப்படுவதோடு, அந்த மீன்களை உண்பதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சினை குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியதும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, மீனவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகள் ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவில்லை என்றால், வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் முழுமையாக புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam