ஜம்முவில் மோதலைத் தடுக்க நடவடிக்கை - சமூக வலைதளங்களுக்கு 60 நாட்கள் தடை
ஜம்மு , 18 ஏப்ரல் (ஹி.ச.) காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவுவதைத் தடுக்க 60 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகே
J


ஜம்மு , 18 ஏப்ரல் (ஹி.ச.)

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவுவதைத் தடுக்க 60 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகேஷ் மின்ஹாஸ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:—

சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பகைமையை தூண்டும் வகையிலான வாசகங்கள், வீடியோக்கள், மீம்ஸ் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போலிச்செய்திகளை பரப்புவோர் மீது பாரதிய நாகரிக் சசுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அபராதம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்.

மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள குழுக்களின் நிர்வாகிகள் தங்கள் குழுக்களில் இத்தகைய பதிவுகள் வராமல் கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் அவர்களும் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சமூக மோதல்களை தூண்டும் போலிச்செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA