தமிழக தேர்தலை யாராலும் கணிக்க முடியாது,2026 முடிவுகள் பலருக்கு அதிர்ச்சி தரும் – த.வெ.க ஜான் ஆரோக்கியசாமி
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது எந்த அரசியல் பகுப்பாய்வாளர்களுக்கும் சாத்தியமில்லை என தமிழக வெற்றிக் கழகம் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் த
John


Hh


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது எந்த அரசியல் பகுப்பாய்வாளர்களுக்கும் சாத்தியமில்லை என தமிழக வெற்றிக் கழகம் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல்களை எந்த ப்செபாலஜிஸ்ட்களும் (psephologists), கருத்துக்கணிப்புகளும், எக்சிட் பால்களும் முன்கூட்டியே சரியாக கணிக்க முடியாது. இதுவரை பல தேர்தல்களில் இப்படிப்பட்ட கணிப்புகள் தவறாகி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதேபோல், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளும் பலரின் கணிப்புகளை முறியடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு வாக்காளர்களின் மனநிலை எப்போதும் தனித்துவமானது என்றும், அவர்கள் எந்த அரசியல் போக்கும் அல்லது கணிப்புகளுக்கும் உட்படாமல் தங்களது விருப்பப்படி வாக்களித்து வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தனது சொந்த வழியில் வாக்களிக்கும் மாநிலம்.

அது எப்போதும் அப்படித்தான் இருந்துள்ளது, இனியும் அப்படித்தான் இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, 2026ஆம் ஆண்டு நடைபெறும் இந்தத் தேர்தல் வாக்காளர்களுக்கு “விருந்தாகவும்”

(voter’s delight), அரசியல் கணிப்பாளர்களுக்கு “தலைவலியாகவும்” (psephologist’s nightmare) அமையும் என்றும் ஜான் ஆரோக்கியசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் சிலர் எதிர்ப்பும் பதிவு செய்து வருகின்றனர்.

இதன் மூலம், தேர்தல் முடிவுகளை முன்னிட்டு அரசியல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ