தொகுதி மறுவரையறை சதி முறியடிப்பு,எதிர்க்கட்சிகள் வெற்றி – ஜோதிமணி எம்.பி
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 2023 செப்டம்பர் மாதத்திலேயே மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அனைத்
Jothimani


Hh


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

2023 செப்டம்பர் மாதத்திலேயே மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும், அதற்கான அறிவிப்பை மத்திய அரசு தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த எந்த தடையும் இல்லையென கூறிய அவர், மத்திய அரசு உண்மையான அக்கறையுடன் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்கான கருவியாகவே இந்த மசோதா பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான முயற்சிகள் அரசியல் சதித் திட்டமாக இருப்பதாகவும், அதை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடித்துள்ளதாகவும் ஜோதிமணி கூறினார்.

தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டதில் பெருமை கொள்கிறோம் என்றும், ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை முழுமையாக நடைமுறைப்படுத்த தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ