நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரை
புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.) நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என்று டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் எந்த விஷயத்தை குறித்து பேச உள்ளார் என்பது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்
D


புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.)

நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என்று டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் எந்த விஷயத்தை குறித்து பேச உள்ளார் என்பது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்று பிரதமர் நாட்டுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அவரது உரை மீது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முன்னதாக இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்காததன் மூலம் எதிர்க்கட்சிகள் தவறு செய்துவிட்டன என்றும், அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், எதிர்க்கட்சிகள் நாட்டின் பெண்களை புறக்கணித்துவிட்டன.

இந்த செய்தி ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்று இரவு பிரதமர் வழங்க உள்ள உரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA