பெண்கள் அதிகாரம் குறித்து வர்த்தகர் மாநாட்டில் குரல் - ரேகா குப்தா குற்றச்சாட்டு
புது டெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச.) டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா, பெண்களின் உரிமைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:— அகில இந்திய வர்த்தகர்கள்
D


புது டெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச.)

டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா, பெண்களின் உரிமைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:—

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில், எதிர்க்கட்சிகளின் பெண்கள் விரோத அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைவரும் கருப்பு பட்டைகள் அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மகள்களை தேச நிர்மாணத்தில் பங்கேற்கச் செய்வதற்காக ‘நாரி சக்தி’ திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

ஆனால் சில அரசியல் கட்சிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பையும் குறுகிய அரசியல் நோக்கில் பார்க்கின்றன.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசும் நாடாளுமன்றக் கட்சிகளின் வாதங்களுக்கு உறுதியான அடிப்படை எதுவும் இல்லை. பெண்கள் விரோத மனப்பான்மையே அதில் தெளிவாக தெரிகிறது.

பெண்களின் உரிமைகளை எதிர்த்த தலைவர்களுக்கு, அவர்களது தொகுதிகளில் உள்ள பெண்களும் மகள்களும் தக்க பதிலை வழங்குவார்கள்.

தற்போது நாடு மாறிவிட்டது. ‘நாரி சக்தி’ இனி காத்திருக்காது;

தங்களது உரிமைகளை தாமே கோரும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA