நாட்டில் வசிக்கும் பெண்கள் முட்டாள்கள் இல்லை - பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.) பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்ததாகவும், நாட்டில் வாழும் பெண்கள் முட்டாள்கள் அல்ல என்றும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா த
D


புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.)

பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்ததாகவும், நாட்டில் வாழும் பெண்கள் முட்டாள்கள் அல்ல என்றும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டி வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:—

அனைத்துக் கட்சிகளாலும் 2023-ல் நிறைவேற்றப்பட்ட முந்தைய மகளிர் நல மசோதாவை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

இதற்காக வரும் திங்கட்கிழமையே நாடாளுமன்றத்தை கூட்டி மசோதாவை தாக்கல் செய்யலாம்.

அப்போது யார் பெண்களுக்கு ஆதரவாக உள்ளார்கள், யார் எதிராக உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிய வரும். நாங்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக இருக்கிறோம்.

நேற்று நடைபெற்றது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முயன்ற சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புக்கும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் வாழும் பெண்கள் முட்டாள்கள் அல்ல, என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA