இடஒதுக்கீடு, மறுவரையறை மசோதாக்கள் நிறை வேறவில்லை - நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.) நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவே
D


புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.)

நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் நோக்கில் இந்த கூட்டம் கூட்டப்பட்டது.

கூட்டத்தின் முதல் நாளிலேயே இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தீவிரமாக விவாதத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது.

இதையடுத்து நேற்று மாலை மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இம் மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமான நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததால் மசோதாக்கள் நிறைவேறவில்லை.

இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA