ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை ‘அபார் ஐ.டி.’ பெற 33.74 கோடி பேர் பதிவு
புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.) நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டையை வழங்கும் ‘அபார் ஐ.டி.’ (APAAR ID) திட்டத்திற்கு இதுவரை 33 கோடியே 74 லட்சம் மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘அபார்’ என்பது ஆதார்
D


புதுடெல்லி , 18 ஏப்ரல் (ஹி.ச.)

நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டையை வழங்கும் ‘அபார் ஐ.டி.’ (APAAR ID) திட்டத்திற்கு இதுவரை 33 கோடியே 74 லட்சம் மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘அபார்’ என்பது ஆதார் அட்டையைப் போன்ற தனித்துவ அடையாள எண் ஆகும்.

இந்த அட்டையில் 12 இலக்க எண் இடம்பெறும். மாணவர்களின் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் பதிவு செய்து பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ‘ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை’ எனவும் இது அழைக்கப்படுகிறது.

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் இந்த அபார் ஐ.டி.க்கு விண்ணப்பிக்கலாம். சிறார் மாணவர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியமாகும்.

இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்படும்.

மேலும், ஆதார் அட்டையின் அடிப்படையில் தகவல்கள் சரிபார்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், பள்ளி மாற்றம், உயர்கல்வி சேர்க்கை உள்ளிட்ட செயல்முறைகள் எளிதாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA