டெல்லியில் இரட்டைக் கொலை தொடர்பாக ஒருவர் கைது
புதுடெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச.) டெல்லியின் சி.ஆர். பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர், மற்றொருவர் படுகாயமடைந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து சாகேத் பகுதியில் உள்ள மருத்
One arrested in connection with double murder in Delhi.


புதுடெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச.)

டெல்லியின் சி.ஆர். பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து சாகேத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மூவர் அனுமதிக்கப்பட்டதாக இரவு 9:30 மணியளவில் சி.ஆர். பார்க் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இச்சமபவம் குறித்து தெற்கு மாவட்ட துணை ஆணையர் அனந்த் மிட்டல் கூறுகையில், மருத்துவப் பரிசோதனையில் தந்தை ராகேஷ் சூட், வயது 62, மற்றும் மகன் கரண் சூட், வயது 27, ஆகிய இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். உறவினர் ராகுல் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என்று கூறினார்.

முந்தைய தகராறுகள் தொடர்பான நீண்டகால பகையே சம்பவத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே குடியிருப்பில் வசிக்கும் அசாத் என்பவர் கூரிய ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கியது அடையாளம் காணப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தரப்பு தெரிவித்தது.

தந்தையும் மகனும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகவும், போலீஸார் சம்பவ இடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.

Hindusthan Samachar / vidya.b