Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரித்து பாஜகவின் பல்வேறு தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உதகை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜன் அவர்களை ஆதரித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தமிழ்நாடு பொறுப்பாளர் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஹெலிகாப்டரில் உதகைக்கு வந்தடைந்தார்.
தீட்டுக்களில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கிய அவரது ஹெலிகாப்டரை அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஹெலிகாப்டரில் உள்ள பல்வேறு இடங்களை ஆய்வு செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதும் கொண்டுவரப்பட்டுள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஹெலிகாப்டர் விமானி மற்றும் அமைச்சருடன் உடன் வந்தவர்களையும் சோதனைக்கு உள்ளாக்கினார்கள் அவர்கள் கொண்டு வந்த கைப்பை பொருட்களை ஆய்வு செய்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam