Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச)
இந்தியச் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு, எதிர்க்கட்சியினரால் வேண்டுமென்றே தடுக்கப்பட்டுள்ளது என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள கருத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மோடியைப் பிரியப்படுத்துவதற்காக மட்டுமே குடிமக்களிடம் பொய் சொல்வதை தயவுசெய்து நிறுத்துங்கள். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது.
அதை இப்போதும் கூட நிறைவேற்ற முடியும். ஆனால், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தும் வகையிலான 'தொகுதி மறுவரையறை மசோதாவை' நிறைவேற்றவே உங்கள் கும்பல் விரும்பியது.
உங்களை துணை முதல்வராக ஆக்கிய ஆந்திர மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமைகளையும் விலைபேச வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இதை விளக்கிக்கூற, உங்களுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ