வால்பாறை விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்
புதுடெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச) கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து நேற்று இரவு 13 பேருடன் வந்த சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 21 வயதான முகமது பாசித் ஓட்டி வந்த வேன், வால்பாறை மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் சாலையை
President Droupadi Murmu Expresses Condolences over Valparai Accident


புதுடெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச)

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து நேற்று இரவு 13 பேருடன் வந்த சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 21 வயதான முகமது பாசித் ஓட்டி வந்த வேன், வால்பாறை மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் சாலையை விட்டு விலகி, 9-வது கொண்டை ஊசி வளைவை நோக்கி கவிழ்ந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வால்பாறை காவல் ஆய்வாளர் தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

சம்பவ இடத்திற்கு மொத்தம் 16 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நேரிட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b