Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 18 ஏப்ரல் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளராக ராமன் என்பவர் உனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்,
இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி விழுப்புரம் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மரத்தால் செய்யப்பட்ட பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள்,ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 4 லட்சத்து 36 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து அருகிலுள்ள சங்கராபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்,மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் வீட்டில் கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / ANANDHAN