ஹைதராபாத் அருகே தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து
ஹைதராபாத், 18 ஏப்ரல் (ஹி.ச.) ஸ்ரீ துர்கா மகேஸ்வரி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஒன்று, மியாபூரில் இருந்து எஸ்.ஆர். நகர் வழியாக ஆந்திர மாநிலம் பாலகொல்லு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு சுமார் 11 மணியளவில், ஹ
Sudden Fire Breaks Out in Private Bus


ஹைதராபாத், 18 ஏப்ரல் (ஹி.ச.)

ஸ்ரீ துர்கா மகேஸ்வரி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஒன்று, மியாபூரில் இருந்து எஸ்.ஆர். நகர் வழியாக ஆந்திர மாநிலம் பாலகொல்லு நோக்கி சென்று கொண்டிருந்தது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில், ஹைதராபாத் அருகே கே.பி.ஹெச்.பி.யில் உள்ள பத்மாவதி பிளாசா பேருந்து நிறுத்தத்தை நெருங்கியபோது, ஓட்டுநர் இருக்கைப் பகுதியில் இருந்து தீப்பொறிகள் வெளிவருவதை ஊழியர்கள் கண்டனர்.

உடனடியாக செயல்பட்ட பேருந்து ஊழியர்கள், பேருந்தில் இருந்த 20 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, முழு பேருந்தையும் சூழ்ந்து கொண்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குக்கட்பள்ளி போக்குவரத்து வட்ட ஆய்வாளர் ஜனய்யா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றாலும், பரபரப்பான கே.பி.ஹெச்.பி. பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b