திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் நாளை பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி
திருச்சி, 18 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் த
T.V.K. leader Vijay to campaign in the Trichy


திருச்சி, 18 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 2-ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த விஜய், அன்றைய தினமே மரக்கடை

காந்தி மார்க்கெட் அருகே பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகிகள் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தனர்.

நாளை (ஏப்ரல் 19)-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2 மணியளவில் திருச்சிக்கு வருகிறார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மேலும், விமானநிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை சாலை வலம் வருகிறார்.

இதையடுத்து விஜய் நாளை (ஏப்ரல் 19) பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவரும் வேட்பாளருமான விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதியை 27 கட்டுப்பாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை விஜய் பிரசாரம் செய்வதற்கு மாநகர காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b