மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த இளைஞர்!
திருவண்ணாமலை, 18 ஏப்ரல் (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகரின் தண்டராம்பட்டு சாலையில் உள்ள சமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மகன் இன்பா (வயது 22) என்பவர் மர்மமான முறையில் மின் ஒயர்களைக் கொண்டு தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துள்ளார். இந்
Tiruvannamalai city police station


திருவண்ணாமலை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகரின் தண்டராம்பட்டு சாலையில் உள்ள சமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மகன் இன்பா (வயது 22) என்பவர் மர்மமான முறையில் மின் ஒயர்களைக் கொண்டு தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த இன்பா என்பவரது தந்தை மணிமாறன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமுத்திரம் காலனி பகுதியில் ஒயர் மூலம் மரத்தில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை மாநகர காவல் நிலைய போலீசார் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இன்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதுமட்டுமில்லாமல் இளைஞர் இன்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து அவரை மரத்தில் தூங்கி தொங்கவிட்டு சென்றார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN