செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
ஈரோடு, 18 ஏப்ரல் (ஹி.ச.) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செங்கோட்டையனின் சொந்த தொகுதியான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்ச
இபிஎஸ்


ஈரோடு, 18 ஏப்ரல் (ஹி.ச.)

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செங்கோட்டையனின் சொந்த தொகுதியான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். நீண்டகாலம் அதிமுகவில் இருந்தவர் இப்போது கட்சிக்கு விரோதமாக செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது கட்சிக்கு துரோகம் எனவும் கூறினார்.

மேலும், கட்சியின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பழனிசாமி விளக்கமளித்தார்.

இதனுடன், செங்கோட்டையன் வலுவாக இருந்த கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், மக்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் மிக மோசமான ஆள் என்றும் அவரை கட்சியில் வைத்திருந்ததே தவறு என ஜெயலலிதா கூறியிருந்ததாகவும் தெரிவித்த இபிஎஸ், செங்கோட்டையனின் தனிப்பட்ட ஒழுக்கம் குறித்து அவரது மனைவி,மகன் தெரிவித்த புகாரால் தான் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P