Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று கோயம்புத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதிமுக–பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள CODISSIA மைதானத்தில் நடைபெற உள்ளது.
மாலை நேரத்தில் பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் இபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது.
மோடியின் வருகையை முன்னிட்டு, கோயம்புத்தூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக தேர்தல் சூழலில் முக்கியமான பிரச்சார நிகழ்வாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P