பெரம்பூரில் இன்று விஜய் தேர்தல் பிரச்சாரம் ரத்து
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பெரம்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரம் நடைபெறாமல் போனது. பாதுகாப்பு ஏற்பாடுகள், காவல்துறை அனுமதி மற்றும் கூட்ட நெரிசல் தொடர
விஜய்


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பெரம்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரம் நடைபெறாமல் போனது. பாதுகாப்பு ஏற்பாடுகள், காவல்துறை அனுமதி மற்றும் கூட்ட நெரிசல் தொடர்பான சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் பங்கேற்கும் பிரச்சாரங்களில் அதிகளவில் மக்கள் திரள்வது வழக்கமாக இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கருதியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பெரம்பூர் பகுதியில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விரைவில் புதிய தேதியில் கூட்டம் நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் விஜய் வீடு வீடாக சென்று தனக்காக வாக்கு சேகரிக்க திட்டமிட்டு இருந்தார்.

விஜய் இன்னும் பல மாவட்டங்களுக்கு நேரில் செல்லாமல் இருப்பது கட்சி தொண்டர்களிடையே தொய்வை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், போட்டியிடும் சொந்த தொகுதியிலே விஜய் செல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று விஜய் திடீரென பெரம்பூரில் உள்ள தவெக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று வகைகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு உடனடியாக புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P