வால்பாறையில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு
வால்பாறை, 18 ஏப்ரல் (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.
வால்பாறையில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு


வால்பாறை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.

வால்பாறை 13-வது வளைவில் இருந்து கவிழ்ந்த வேன் 9-வது வளைவு அருகே விழுந்தது.

விபத்துக்குள்ளான வேனில் கேரள மாநிலம் பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த 13 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். வால்பாறையில் சுற்றுலா முடித்துவிட்டு இறங்கி வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவலறிந்து வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

21 வயதான முகமது பாசித் என்பவர் வேனை ஓட்டி வந்தார். 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது வேன் சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, 16 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. காயமடைந்த 13 பேரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Hindusthan Samachar / vidya.b