Enter your Email Address to subscribe to our newsletters

பாங்குரா, 18 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மே 4 அன்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இன்று மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்.
ஆதித்யநாத் இன்று காலை 11:50 மணிக்கு மாதாபங்கா தொகுதியிலும், மதியம் 1:20 மணிக்கு துப்குரி சட்டமன்றத் தொகுதியிலும் பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
பின்னர், மாலை 4:15 மணிக்கு பாங்குரா சட்டமன்றத் தொகுதியில் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்ட முதலமைச்சர் ஆதித்யநாத் கூறியிருப்பதாவது,
திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஆதரவுடன் செழித்து வளரும் மணல் மாஃபியா, நிலக்கரி மாஃபியா, நில மாஃபியா மற்றும் கால்நடை மாஃபியாக்களின் பிடியில் மேற்கு வங்கம் சிக்கியுள்ளது.
விழிப்புணர்வு கொண்ட பொதுமக்கள் - இங்குள்ள மக்கள் - இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு 'இரட்டை இயந்திர பாஜக அரசு' மட்டுமே என்பதை அறிவார்கள்.
இந்த உணர்வையும் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்த, இன்று மாதாபங்கா மற்றும் துப்குரி சட்டமன்றத் தொகுதிகளில் பொதுமக்களுடன் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும், பாங்குரா சட்டமன்றத் தொகுதியில் பேரணி வாயிலாகவும் கலந்துரையாட உள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b