மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம்
கோவை, 18 ஏப்ரல் (ஹி.ச.) தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (18.04.2026) இரவு கோவை வருகிறார். அதன் பின்னர் ஈரோடு மாவட்டம் சிவகிரி சென்று ரோடு ஷோ மூலம் நாளை (19.04.2026) கால
Union Home Minister Amit Shah to campaign in Erode tomorrow


கோவை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (18.04.2026) இரவு கோவை வருகிறார்.

அதன் பின்னர் ஈரோடு மாவட்டம் சிவகிரி சென்று ரோடு ஷோ மூலம் நாளை (19.04.2026) காலை 10:00 மணியளவில் வாக்கு சேகரிக்க உள்ளார். அப்போது மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளார் கிருத்திகா சிவகுமாரை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து அமித்ஷா சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும் நாளை மாலை 04:15 மணியளவில் ரோடு ஷோ மூலம் பரப்புரை செய்ய உள்ளார். முன்னதாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அதன் பின்னர், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜனை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொள்கிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b