விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழப்பு - மீட்பு பணிகள் தீவிரம்
விருதுநகர், 19 ஏப்ரல் (ஹி.ச) விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை இயங்காது. தேர்தல் காரணமாக 23ம் தேதி விடுமுறை அளி
14 Dead in Virudhunagar Firecracker Factory Blast


விருதுநகர், 19 ஏப்ரல் (ஹி.ச)

விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை இயங்காது.

தேர்தல் காரணமாக 23ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பட்டாசு ஆலை இயங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆலையில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 4 அறைகள் சேதமடைந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்தின் போது 10 கி.மீ வரை அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வானுயரம் புகை சூழ்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b